சினிமா செய்திகள்

வசூலில் ரூ.100 கோடி மைல் கல்லை எட்டியது மகாராஜா

Published On 2024-07-04 01:44 GMT   |   Update On 2024-07-04 01:44 GMT
  • நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
  • இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.

இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது

ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். சிறுமியின் பாலியல் வன்கொடுமையை மையமாக பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

அரண்மனை 4 - க்கு பிறகு 50 கோடியை தாண்டும் திரைப்படமாக மகாராஜா அமைந்துள்ளது. இப்படம் நேற்றுவரை 82 கோடி ரூபாய் உலகளவில் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வேகமாக வசூலித்து வந்த மகாராஜா திரைப்படம் பிரபாசின் கல்கி298 ஏடி திரைப்படம் வெளியாகியதால் கொஞ்சம் வசூலில் மந்தம் தட்டியது. இதனால் திரைப்படம் 100 கோடியை எட்டுவதற்கு தாமதம் ஆனது.

ஆனால் தற்பொழுது திரைப்படம் 100 கோடி வசூலில் தாண்டியுள்ளது. 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அரண்மனை திரைப்படத்திற்கு பிறகு 100 கோடி வசூலித்த திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News