சினிமா செய்திகள்

மம்முட்டியின் 'பிரம்மயுகம்' ரூ.50 கோடி வசூலை குவித்தது

Published On 2024-02-26 07:40 GMT   |   Update On 2024-02-26 07:40 GMT
  • அரசவையில் மன்னன் - புலவர் இடையே நடக்கும் ஒரு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை.
  • முழுக்க முழுக்க கருப்பு-வெள்ளை வடிவில் எடுக்கப்பட்ட படம் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான திரையரங்க அனுபவத்தை வழங்கி உள்ளது.

'பிரம்மயுகம்' கடந்த 15- ந்தேதி மலையாள மொழியில் வெளிவந்த 'திகில்' படம். இப்படத்தில் மம்முட்டி, அர்ஜுன் அசோகன், சித்தார்த், பரதன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார். கிறிஸ்டோ சேவியர் இசை அமைத்திருந்தார்.

நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை ரூ.27 கோடி பட்ஜெட்டில் தயாரித்தது. இந்த படம் அரசவையில் மன்னன் - புலவர் இடையே நடக்கும் ஒரு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை.



இந்த படம் மலையாள திரையுலகில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்நிலையில் 10 நாட்களில் இந்த படம் ரூ.50 கோடி வசூலை குவித்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முழுக்க முழுக்க கருப்பு-வெள்ளை வடிவில் எடுக்கப்பட்ட இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான திரையரங்க அனுபவத்தை வழங்கி உள்ளது.

Tags:    

Similar News