தளபதி 69 படப்பிடிப்பு தளத்தில் இருந்து பூஜா ஹெக்டே பகிர்ந்த புகைப்படம்
- நடிகர் விஜய், இயக்குநர் எச். வினோத் இயக்கும் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.
- பூஜா ஹெக்டே இப்படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரேவற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் தனது அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாடு, கட்சி சார்ந்த கூட்டங்களில் கலந்து கொண்டார்.
இதனிடையே நடிகர் விஜய், இயக்குநர் எச். வினோத் இயக்கும் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்தப் படத்தின் பூஜை தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படமே இவர் நடிக்கும் கடைசி திரைப்படம் என கூறப்பட்டு வருகிறது. அதற்கு பிறகு முழு நேர அரசியல் பணிகளில் ஈடுப்படவுள்ளார்.
இந்நிலையில் படத்தின் கதாநாயகியான பூஜா ஹெக்டே சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் இந்தாண்டு தளபதி 69 படத்திற்கான கடைசி ஷாட் என பதிவிட்டுள்ளார். அதில் பூஜா ஹெக்டே மற்றும் விஜயின் கால்கள் இடம் பெற்றுள்ளன. இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.