2024 ரீவைண்ட் : சிறந்த தமிழ் ஓடிடி வெப் தொடர்கள்
- : இந்தாண்டு வெளியான சிறந்த தமிழ் வெப் தொடர்களை பற்றி இச்செய்தியில் காணலாம்
- இன்ஸ்பெக்டர் ரிஷி வெப் தொடரை நந்தினி என்பவர் இயக்கியுள்ளார்.
ரீவைண்ட் 2024 : இந்தாண்டு வெளியான சிறந்த தமிழ் வெப் தொடர்களை பற்றி இச்செய்தியில் காணலாம்
இன்ஸ்பெக்டர் ரிஷி
இன்ஸ்பெக்டர் ரிஷி வெப் தொடரை நந்தினி என்பவர் இயக்கியுள்ளார். இத்தொடரில் நவீன் சந்திரா, ஸ்ரீகிருஷ்ணா தயால். கன்னா ரவி, மாலினி ஜீவரத்னம், சுனைனா, குமரன் , ஹரினி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு சிறிய மலைகிராமத்தில் தொடர்ந்து நடக்கும் மர்ம இறப்புகளை மையமாக வைத்து இயக்கிய தொடராகும். இத்தொடரில் மொத்தம் 10 எபிசோடுகள் உள்ளன. இத்தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தலைமை செயலகம்
தலைமை செயலகம் வெப் தொடரை இயக்குனர் வசந்தபாலன் இயக்கியுள்ளார். இத்தொடரில் கிஷோர், ஸ்ரீயாரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கனி கஸ்தூரி, நிரூப், தர்ஷா குப்தா, சாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். கிஷோர் தலைமையில் இருக்கும் கட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்ப்டுகிறது. அதிகாரம், அரசியல் , ஊழல் என இவற்றை பத்தி பேசும் கதையாக தலைமை செயலகம் வெப் தொடர். இத்தொடர் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பாராசூட்
கிஷோர்,கனி திரு, கிருஷ்னா , சக்தி ரித்விக் , இயல் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பாராசூட் வெப் தொடர். ஸ்ரீதர் கே இத்தொடரை இயக்கியுள்ளார். ஒரு உடன்பிறந்த இருவரும் தங்கள் கண்டிப்பான தந்தையின் மொப்பட்டை சவாரிக்கு எடுத்துச் சென்று அது திருடப்பட்ட பிறகு, குழந்தைகள் அதைத் தேடிச் செல்கிறார்கள், அவர்கள் காணாமல் போனது குறித்து பெற்றோருக்கு எந்த துப்பும் இல்லை. நுட்பமான நடிப்பு, மிருதுவான திரைக்கதை மற்றும் தொழில்நுட்ப செயலாக்கத்துடன், பாராசூட் இந்த ஆண்டு பார்க்க வேண்டிய இணையத் தொடர்களில் முக்கியமான ஒன்றாகும். இத்தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
சட்னி சாம்பார்
ராதா மோகன் இயக்கத்தில் யோகி பாபு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது சட்னி சாம்பார் வெப் தொடர். இவருடன் நிழல்கள் ரவி, வாணி போஜன், சந்திரமௌலி, இளங்கோ குமரவேல், நந்தினி மற்றும் நித்தின் சத்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இது யோகி பாபு நடத்தி வரும் கையேந்திபவன் மற்றும் மற்றொரு மகனின் பேமஸ் ஓட்டலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும். இத்தொடர் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
தலைவெட்டியான் பாளையம்
தலைவெட்டியான் பாளையம் ஒரு நகைச்சுவை வெப் தொடராகும். இத்தொடர் இந்தி தொடரான பஞ்சாயத்தின் தமிழ் வெர்ஷனாகும். இத்தொடரில் அபிஷேக் குமார், சேத்தன் கடம்பி, நியத்தி, தேவதர்ஷினி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சென்னையில் பிறந்து வளர்ந்த இளைஞனான அபிஷேக் ஒரு தனி கிராமத்தில் பஞ்சாயத் தலைவராக நியமிக்கப்படுகிறார். அந்த கிராம வாழ்க்கையில் அவர் பழகிக்கொள்ளும் விதத்தை நகைச்சுவையாக காட்சி படுத்தியுள்ளனர். இத்தொடரை பிரபல இயக்குனரான நாகா இயக்கியுள்ளார். இத்தொடர் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஜர்னி
இத்தொடரை சேரன் இயக்கியுள்ளார். இத்தொடரில் ஜாஸ்மின், சரத்குமார், அஞ்சு குரியன், கலையரசன், திவ்யபாரதி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். வெவ்வேறு பின்னணிகளை கொண்ட 5 கதாப்பாத்திரம் ஒரு வேலைக்காக போட்டியிடுகின்றனர் இதனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும். இத்தொடர் மொத்தம் 9 எபிசோடுகள் கொண்டதாகும். இத்தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஹார்ட் பீட்
ஆர் கே மல்டிஸ்பெஷாலிடி மருத்துவமனையில் பணிப்புரியும் மருத்துவர்கள் அன்கு வேலை செய்யும் பணியாளர்கள் அவர்களின் வாழ்க்கை பிரச்சனையை பற்றி மையமாக வைத்து எடுக்கப்பட்டது ஹார்ட் பீட் வெப் தொடர். அனுமோல் , தீபா பாலு , சாருகேஷ் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்தொடரை தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். இத்தொடரில் மொத்தம் 72 எபிச்சோடுகள் உள்ளன. இத்தொடர் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.