மகா கும்பமேளாவில் மனங்கவர்ந்த மோனாலிசா.. பாலிவுட்டில் இருந்து தேடிவந்த ஹீரோயின் வாய்ப்பு
- இதனால் மோனாலிசா அசைவுகர்யங்களுக்கும் ஆளாகியுள்ளார்.
- நேரடியாகச் சென்று மோனாலிசா மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து விவாதிப்பதாகக் சனோஜ் மிஸ்ரா கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை நடைபெறும்.
சுமார் 40 கோடி பேர் இங்கு புனித நீராட வருகை தருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் 16 வயதான மோனாலிசா போஷ்லே என்ற 16 வயது பெண் தனது தந்தையுடன் சேர்ந்து பாசி மாலை விற்று வருகிறார்.
மோனாலிசா தனது தனித்துவமான கண்கள் மற்றும், இயற்கையான அழகால் இணையத்தில் டிரண்ட் ஆகி வருகிறார். இதனால் அவரை பேட்டி காணவும், அவருடன் செல்பி எடுத்துக்கொள்ளவும், கும்பமேளாவில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் மோனாலிசா அசைவுகர்யங்களுக்கும் ஆளாகியுள்ளார். அவரின் பாசி மாலை வியாபாரமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மோனாவிசாவுக்கு சினிமாவில் ஹீரோனியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மோனாலிசாவை தனது அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க விருப்புவதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேரடியாகச் சென்று மோனாலிசா மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து விவாதிப்பதாகக் சனோஜ் மிஸ்ரா கூறியுள்ளார்.
'டைரி ஆஃப் மணிப்பூர்' என்ற தனது அடுத்த படத்தில் நடிக்க பொருத்தமான ஒருவருக்காக காத்திருந்ததாகவும், மோனாலிசாவின் கரிய தோல் மற்றும் தேன் போன்ற கண்கள் தனது படத்தின் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.