'விடாமுயற்சி' ஒத்திவைப்பால் பொங்கலுக்கு வெளியாகும் 11 படங்கள்...
- சத்தமில்லாமல் இருந்த படங்கள் பொங்கலை குறி வைத்து வெளியாவதாக அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
- மேலும் சில படங்கள் பொங்கல் பண்டிகை தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி' படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் பொங்கல் அன்று வெளியாகாது என்று தயாரிப்பு நிறுவனம் நேற்று தெரிவித்தது. பொங்கலுக்கு 'விடாமுயற்சி' வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததால் மற்ற படங்கள் எதுவும் பொங்கலுக்கு வெளியாவது குறித்த அறிவிப்புகள் வெளியிடவில்லை.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் 'விடாமுயற்சி' மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாததால் சத்தமில்லாமல் இருந்த படங்கள் பொங்கலை குறி வைத்து வெளியாவதாக அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
நேற்று வரை வணங்கான், கேம் சேஞ்சர், படைத்தலைவன், காதலிக்க நேரமில்லை, ஃப்ரீடம், டென் ஹவர்ஸ், 2K லவ் ஸ்டோரி, தருணம், சுமோ உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு போட்டி போட்டுக்கொண்டு வெளியாவதாக அறிவிப்பு வந்த நிலையில் 'மெட்ராஸ்காரன்', 'நேசிப்பாயா' படங்களும் இந்த வரிசையில் இணைந்துள்ளன.
மேலும் சில படங்கள் பொங்கல் பண்டிகை தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.