நாளை வெள்ளித்திரையில் வெளியாகும் திரைப்படங்கள்
- ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- ஹேமந்த் நாராயணன் மர்மர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
கிங்ஸ்டன்
ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. கிங்ஸ்டன் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார். இப்படத்தில் திவ்யா பாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. படத்தின் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. இப்படமே முதல் கடல் ஹாரர் திரைப்படமாக கிங்ஸ்டன் திரைப்படம் உருவாகியுள்ளது.
ஜென்டில்வுமன்
கோமலா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓசியன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ஜென்டில்வுமன். இந்த திரைப்படம் சமூகத்தில் குடும்ப அமைப்பில் பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ளது. திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
மர்மர்
ஹேமந்த் நாராயணன் மர்மர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படமே தமிழில் உருவாகியுள்ள முதல் Found footage ஹாரர் திரைப்படமாகும். Found footage ஹாரர் திரைப்படங்கள் என்றால் திரைப்படத்தின் காட்சிகள் பெரும்பாலானவை டேப் ரெகார்டர், சிசிடிவி கேமரா ஃபூட்டஜ் போலயே காட்சி படுத்திருப்பர். இதன் மூலம் உண்மையாகவவே அந்த அமானுஷ்ய சம்பவ உணர்வை அது பார்வையாளர்களுக்கு கடத்தும். திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
லெக்பீஸ்
லெக்பீஸ் திரைப்படம் 5 ஆண்களை சுற்றி நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது. இப்படத்தை ஸ்ரீனாத் இயக்கியுள்ளார். படத்தில் யோகி பாபு, ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி மற்றும் ரமேஷ் திலக் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் சென்னையில் 30 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. படத்தை மணிகண்டனின் ஹீரோ சினிமாஸ் தயாரித்துள்ளது
.
எமகாதகி
தெலுங்கு நடிகையான ரூபா கொடுவாயூர் தற்பொழுது எமகாதகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார். இப்படம் ஒரு அமானுஷ்ய சம்பவங்களின் அடிப்படையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ளார். படத்தை சரங் பிரதார்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.ரூபாவுடன் யூடியூப் பிரபலம் நரேந்திர பிரசாத். ஹரிதா, கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நிறம் மாறும் உலகில்
இயக்குனர் பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது.
படவா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விமல் மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள திரைப்படம் படவா. இப்படத்தை கே.வி நந்தா இயக்கியுள்ளார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக இருந்தது ஆனால் சில சூழ்நிலை காரணமாக திரைப்படம் வெளியாகவில்லை . இத்திரைப்படம் 6 ஆண்டுகளுக்கு முன் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மனிதம் என்ற திரைப்படமும் நாளை வெளியாக இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.