கிரிக்கெட் (Cricket)

ஒரே பெயரால் குழம்பிய ரசிகர்கள்.. பாலிவுட் நடிகரை பாராட்டி கமெண்ட் செய்த வருண் சக்கரவர்த்தி

Published On 2025-03-06 17:11 IST   |   Update On 2025-03-06 17:11:00 IST
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  • வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக, நடிகர் வருண் தவானின் இன்ஸ்டா பதிவில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2 ஆவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக அதிரடியாக விளையாடிய ஹெட் விக்கெட்டை வருண் வீழ்த்தினார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக, பாலிவுட் நடிகர் வருண் தவானின் இன்ஸ்டா பதிவில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த ட்ரெண்டில் இணைந்து வருண் சக்கரவர்த்தியும் அந்த இன்ஸ்டா பதிவில் தவானை பாராட்டி கமெண்ட் செய்துள்ளார்.

இதற்கு முன், விராட் கோலி அடித்த பந்தை கேட்ச் பிடித்து அவுட்டாக்கிய நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸின் இன்ஸ்டா கணக்கிற்கு பதில் பிலிப்ஸ் நிறுவனத்தை ரசிகர்கள் திட்டி தீர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News