null
இன்று மாலை வெளியாகும் நாகர்ஜுனாவின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
- குபேரா படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று வந்த நிலையில், மும்பையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக சென்ற வாரம் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
- நாகர்ஜுனாவின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று மாலை 7.15 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெலுங்கு தொலைக்காட்சியில் வெளியிட உள்ளனர்
தனுஷின் 50 வது திரைப்படமான ராயன் படத்தை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா, நாகர்ஜுனா என பலர் நடித்து வருகின்றனர்.தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
குபேரா படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று வந்த நிலையில், மும்பையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக சென்ற வாரம் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் குபேரா திரையில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
படத்தின் அடுத்த அப்டேட்டான நாகர்ஜுனாவின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று மாலை 7.15 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெலுங்கு தொலைக்காட்சியில் வெளியிடப்போவதாக போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து இதுகுறித்து நாகர்ஜூனாவும் பேசி வீடியோவை அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். படத்தில் எவ்வித கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.