சினிமா செய்திகள்

விடாமுயற்சி ரிலீஸ் ஒத்திவைப்பு.. பொங்கலுக்கு வெளியாகும் புதிய படங்கள்

Published On 2025-01-01 14:55 GMT   |   Update On 2025-01-01 14:55 GMT
  • காதலிக்க நேரமில்லை திரைப்படம் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
  • சண்முகப் பாண்டியனின் ‘படைத் தலைவன்’ படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படம் தவிர்க்க முடியாத காரணங்களால் பொங்கல் அன்று வெளியாகாது என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

பொங்கலையொட்டி வருகிற 10-ந்தேதி பாலாவின் வணங்கான் படமும் ஷங்கரின் கேம் சேஞ்சர் படமும் வெளியாகவுள்ளது.

பொங்கல் ரேஸில் இருந்து விடாமுயற்சி திரைப்படம் விலகியதை அடுத்து பொங்கல் விடுமுறையை குறிவைத்து பல புதிய படங்கள் களமிறங்கியுள்ளன.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள 'காதலிக்க நேரமில்லை' திரைப்படம், பொங்கல் வெளியீடாக ஜனவரி 14ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிபி ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'டென் ஹவர்ஸ்' படமும் சண்முகப் பாண்டியனின் 'படைத் தலைவன்' படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் நடிகர் சிவா நடித்து உள்ள 'சுமோ' படமும் சசிக்குமார் நடித்துள்ள 'ஃப்ரீடம்' படமும் பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித் குமாரின் "விடாமுயற்சி" ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதை அடுத்து, மேலும் சில படங்கள் பொங்கல் பண்டிகை தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

Tags:    

Similar News