மம்மூட்டி நடித்த `பசூக்கா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
- மம்மூட்டி அடுத்ததாக பசூக்கா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை தீனோ டெனிஸ் இயக்கியுள்ளார்.
அண்மையில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் வெளியாகி மக்களி மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவே கவுதம் மேனன் இயக்கும் முதல் மலையாள திரைப்படமாகு. இப்படம் ஒரு டிடெக்டிவ் திரில்லர் கதை அம்சத்துடன் அமைந்தது. திரைப்பட இறுதியில் இடம் பெற்றிருக்கும் டுவிஸ்ட் காட்சி மக்கள் அனைவராலும் பாராட்டைப் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து மம்மூட்டி பசூக்கா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தீனோ டெனிஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கவுதம் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹகிம், திவ்யா பிள்ளை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை சரிகமா, யூட்லீ பிலிம்ஸ் மற்றும் தியேட்டர் ஆஃப் டிரீம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் இசையை மிதுன் முகுந்தன் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் திரைப்படம் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தநிலையில் தற்பொழுது படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.