null
ஆஸ்கர் 2025 இறுதிப் பட்டியல்: திருநங்கை நடிகை முதல் சாதனை படைத்த சர்வதேச படம் வரை - முழு லிஸ்ட்
- திருநங்கை நடிகை ஒருவர் சிறந்த நடிகை பிரிவில் ஆஸ்கர் பரிந்துரையில் இடம்பெற்றது இதுவே முதல்முறை.
- ஆங்கிலம் அல்லாத பிறமொழிப் படம் ஒன்று அதிக பிரிவில் பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல்முறை.
அமெரிக்காவின் சினமா துறையான ஹாலிவுட் இயங்கி வரும் இடமான கலிபோர்னியாவில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதனால் திரைப்படங்களுக்கான வருடாந்திர ஆக்ஸர் விருது விழா இரண்டு முறை ஒத்தி வைப்பட்டது.
தொடர்ந்து மார்ச் 2 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் 97வது ஆக்ஸர் விழா நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் இந்த வருடத்தின் விருதுகளுக்கான இறுதித் தேர்வு பட்டியலை ஆஸ்கர் குழு நேற்று வெளியிட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக, பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஜாக் ஆடியார்ட் இயக்கிய எமிலியா பெரெஸ் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக 13 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பாடல் உள்ளிட்ட 13 பிரிவுகளில் இந்த படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
திருநங்கையான கர்லா சோஃபியா காஸ்கன் (Karla Sofía Gascón) சிறந்த நடிகை பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
திருநங்கை நடிகை ஒருவர் சிறந்த நடிகை பிரிவில் ஆஸ்கர் பரிந்துரையில் இடம்பெற்றது இதுவே முதல்முறை. மேலும் ஆங்கிலம் அல்லாத பிறமொழிப் படம் ஒன்று அதிக பிரிவில் பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல்முறை.
எமிலியா பெரெஸ் படத்துக்கு அடுத்தபடியாக ஜான் எம். சூ இயக்கிய ஹாலிவுட் திரைப்படமான 'விக்டு' 10 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் பிராடி கார்பெட் இயக்கிய 'தி புரூட்டலிஸ்' திரைப்படமும் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் இறுதிப் பட்டியல்:
சிறந்த படம்: எமிலியா பெரெஸ், அனோரா, தி புரூட்டலிஸ்ட், கம்ப்ளீட் அன்னோன், கான்கிலேவ், டியூன் பார்ட் 2, எமிலியா பெரெஸ், ஐ ஆம் ஸ்டில் ஹியர், நிக்கல் பாய்ஸ், தி சப்ஸ்டன்ஸ், விக்டு.
சிறந்த நடிகை: டெமி மூர் - சப்ஸ்டன்ஸ், சிந்தியா எரிவோ - விக்டு, மைக்கி மேடிசன் - அனோரா, கார்லா சோபியா காஸ்கான் - எமிலியா பெரெஸ், பெர்னாண்டா டோரஸ் - ஐ ஆம் ஸ்டில் ஹியர்.
சிறந்த நடிகர்: அட்ரியன் பிராடி, தி ப்ரூட்டலிஸ்ட, Timothée Chalamet - கம்ப்ளீட் அன்னோன் , கோல்மன் டொமிங்கோ - சிங் சிங், ரால்ப் ஃபியன்ஸ் - கான்கிளேவ், செபாஸ்டியன் ஸ்டான் - அப்ரெண்டிஸ்
சிறந்த இயக்குனர்: ஜாக் ஆடியார்ட் - எமிலியா பெரெஸ், சீன் பேக்கர் - அனோரா, பிராடி கார்பெட் - தி ப்ரூட்டலிஸ்ட், ஜேம்ஸ் மான்கோல்ட் - கம்ப்ளீட் அன்னோன், கோரலி ஃபார்கேட் - சப்ஸ்டன்ஸ்
சிறந்த சர்வதேச திரைப்படம்: ஐ ஆம் ஸ்டில் ஹியர் - பிரேசில், கேர்ல் வித் தி நீடில் - டென்மார்க், எமிலியா பெரெஸ் - பிரான்ஸ், சீட் ஆப் சேக்ரட் பி[க் - ஜெர்மனி, ஃபுளோ - லாட்வியா.
சிறந்த ஒளிப்பதிவு: தி ப்ரூட்டலிஸ்ட், டியூன் பார்ட் 2, எமிலியா பெரெஸ், மரியா, நோஸ்ஃபெராடு
சிறந்த ஒரிஜினல் திரைக்கதை : அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட், ரியல் பெயின், செப்டம்பர் 5, சப்ஸ்டன்ஸ்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.