நம்ம படம் ரிலீஸ் நாளே பண்டிகை நாளாக இருக்கும் என அஜித் கூறினார் - மகிழ் திருமேனி
- பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் வருகிற 6-ந்தேதி வெளியாகிறது.
- இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
நடிகர் அஜித் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் 'விடாமுயற்சி'.
அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை வெளியிட முடியவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து இப்படம் வருகிற 6-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், பண்டிகை நாளில் நம்ம படம் வெளியாகவில்லை என்றால் என்ன? நம்ம படம் வெளியாகும் அந்த நாள் பண்டிகை நாளாகத்தான் இருக்கும் என்று அஜித் கூறியதாக இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.
ஆணாதிக்கம், பெண்களுக்கு எதிரான பண்பாட்டுச் சூழல் போன்றவற்றில் உடன்பாடு இல்லாதவர் அஜித். அதனால் அந்த கருத்தை கொண்ட ஒரு படத்தைச் செய்ய விரும்பினார். இந்த அம்சங்களை எல்லாம் கலந்த படமாக 'விடாமுயற்சி' இருக்கும். அஜித்தின் கதாபாத்திரத்திற்கு பெயர் வைப்பது தொடர்பாக கேட்டபோது, அவர் அர்ஜூன் என்று வைக்க விரும்பினார். அவரும், நானும் சேர்ந்து பல படங்களில் இணைந்து பணியாற்றுவோம் என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்