சினிமா செய்திகள்
null

நாளை திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்கள்

Published On 2025-01-23 21:13 IST   |   Update On 2025-01-23 21:17:00 IST
  • ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் திரைப்படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
  • வல்லான் திரைப்படத்தின் கதாநாயகனாக சுந்தர்.சி நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் நாளை வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்து தகவலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

குடும்பஸ்தன்

மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வணிக ரீதியிலும் அது வெற்றிப்படமாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து அடுத்ததாக ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் திரைப்படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ளார்.தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.


இப்படத்திற்கு வைசாக் இசையமைத்துள்ளார். ஒரு குடும்பஸ்தன் எப்படி உருவாகிறான் என்பதை நகைச்சுவையாக காட்சிப்படுத்தியுள்ளனர்.


திரைப்படத்தின் முதல் பாடலான ஸீரோ பேலன்ஸ் மற்றும் கண்ண கட்டிகிட்டு ஹீரோ பாடல் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.

பாட்டல் ராதா

இயக்குநர் பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "பாட்டல் ராதா". பா. ரஞ்சித்-இன் உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள பாட்டல் ராதா திரைப்படத்தில் சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ள பாட்டல் ராதா திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

மிஸ்டர் ஹவுஸ் கீபிங்

ஜம்ப் கட்ஸ் யூடியூப் சேனலின் மூலம் தனது ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் ஹரி பாஸ்கர். அடுத்ததாக மிஸ்டர் ஹவுஸ் கீபிங் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.


இப்படத்தில் ஹரி பாஸ்கருக்கு கதாநாயகியாக லாஸ்லியா நடித்துள்ளார். இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை குலோதுங்கவர்மன், இசையை ஓஷோ வெங்கட் மேற்கொண்டுள்ளார்.

படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. ஹரி பாஸ்கர் , வீட்டில் ஐடி-யில் வேலை செய்கிறேன் என வீட்டிற்கு தெரியாமல் சென்னையில் வந்து லாஸ்லியா வீட்டில் வீட்டு பணி செய்யும் நபராகவுள்ளார்.


லாஸ்லியாவிடம் காதல் கொள்கிறார். ஆனால் லாஸ்லியா பல நபர்களை டேட் செய்து வருகிறார் போன்ற காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளது.

வல்லான்

வல்லான் திரைப்படத்தின் கதாநாயகனாக சுந்தர்.சி நடித்துள்ளார். இப்படத்தை VR டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக VR மணிகண்டராமன் பிரம்மாண்டமாக தயாரிக்க, மணி சேயோன் இயக்கியுள்ளார். சுந்தர் சி இப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.


ஹெபா படேல், தான்யா ஹோப், சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், அஜித் கோஷி ஆகியோர் நடிக்கின்றனர். மணி பெருமாள் ஒளிப்பதிவை மேற்கொள்ள சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். இந்த படம் கிரைம் திரில்லராக உருவாக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் முன்னேற்ற கழகம்

'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என்ற படத்தின் கதாநாயகனாக யோகிபாபு நடித்துள்ளார். இப்படத்தில் யோகி பாபுவுடன், செந்தில், அகல்யா போன்றோர் நடித்துள்ளனர்.


இப்படத்தை சகுனி படத்தை இயக்கிய ஷங்கர் தயால் இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் மாரடைப்பால் காலமானது வேதனையளிக்கும் ஒன்று.

பூர்வீகம்

பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் ஆர்.முருகானந்த் தயாரிப்பில், இயக்குநர் ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில், கதிர், மியாஶ்ரீ நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, ஏர் பூட்டிய தமிழனின் வரலாற்றைப் போற்றும் படைப்பாக, உருவாகியுள்ள திரைப்படம் "பூர்வீகம்".


நம் இந்திய நாட்டின் முதுகெலும்பான தொழில் விவசாயம். இரண்டு தலைமுறையாக இளைஞர்கள் தங்களின் பூர்வீகத்தை விட்டு இடம்பெயர்ந்து படிப்பிற்காகவும் தொழிலுக்காகவும் முழுமையாக இடம்பெயர்ந்து தற்பொழுது நகரத்திலேயே வாழ்ந்து வருகின்றனர் .

நகரத்திற்கு இடம்பெயரும் இளைய சமுதாயம், நம் கலாச்சாரத்தையும், வாழ்வியலையும், விவசாயத்தின் மேன்மையையும், அப்படியே உதறி தள்ளிவிட்ட விவசாயத்தின் அருமையை எடுத்துச் சொல்லும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

Tags:    

Similar News