மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் ஆளுமை செலுத்திய சுந்தர் சி
- சுந்தர் சி இயக்கத்தில் மத கஜ ராஜா திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது
- திரைப்படம் இதுவரை 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் மத கஜ ராஜா திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 12 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நித்தின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி என பலரும் நடித்துள்ளனர்.
படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. திரைப்படம் இதுவரை 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்நிலையில் படத்தின் வெற்றியை தொடர்ந்து மத கஜ ராஜா திரைப்படத்தை இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் வரும் ஜனவரி 31 ஆம் தேதி படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. அந்த மொழியிலும் திரைப்படம் வெற்றிப் பெற்றால் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலில் எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.