சினிமா செய்திகள்
குரு சோமசுந்தரம் நடித்த `பாட்டல் ராதா' படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு
- பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "பாட்டல் ராதா."
- திரைப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "பாட்டல் ராதா." பா. ரஞ்சித்-இன் உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள பாட்டல் ராதா திரைப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ள பாட்டல் ராதா திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு மக்களிடம் அதிகரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.