சினிமா செய்திகள்

திடீரென சரிந்து விழுந்த மேடை.. நூலிழையில் தப்பித்த பிரியங்கா மோகன்

Published On 2024-10-03 17:03 IST   |   Update On 2024-10-03 17:03:00 IST
  • பிரியங்கா மோகன் கடந்த மாதம் நானி நடிப்பில் வெளிவந்த சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
  • தற்பொழுது சிகிச்சைக்கு பின் நலமாகவுள்ளார்.

பிரியங்கா மோகன் கடந்த மாதம் நானி நடிப்பில் வெளிவந்த சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அடுத்ததாக ஜெயம் ரவி நடித்து முடித்து ரிலீசுக்கு தயாராகியுள்ள பிரதர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் தோரூரில் உள்ள வணிக வளாக தொடக்க விழாவில் நடிகை பிரியங்கா மோகன் இன்று கலந்துக்கொண்டார். அப்பொழுது கூட்ட நெரிசலில் சிக்கிய அவர் மேடை சரிந்து விழுந்ததில் காயமடைந்தார்.

தற்பொழுது சிகிச்சைக்கு பின் நலமாகவுள்ளார். தான் நலமாக உள்ளே ரசிகர்கள் கவலைப்பட வெண்டாம் என தெரிவித்துள்ளார். மேடை சரிந்து விழுந்த காணொளி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News