சைஃப் அலி கான் இரண்டு மூன்று நாட்களில் வீடு திரும்ப வாய்ப்பு: டாக்டர்கள்
- பாந்திராவில் உள்ள வீட்டில் மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயம்.
- குற்றவாளியை பிடிக்க 20 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வீடு மும்பை பாந்த்ராவில் உள்ளது. நேற்று முன்தினம் விடியற்காலை திடீரென அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியால் தாக்கினார். இதில் அவரது கழுத்து மற்றும் முதுகெலும்பு அருகே பலத்த காயம் ஏற்பட்டது.
சைஃப் அலி கானை கத்தியால் தாக்கிய மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்தம் சொட்டசொட்ட ஆட்டோவில் லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சைஃப் அலி கான். அங்கு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் ஐசியு-வில் சேர்க்கப்பட்டார். பின்னர் பொது பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
தற்போது அவரது உடல் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. அவர் நடக்கிறார். வழக்கமான உணவு எடுத்துக் கொள்கிறார். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கிறோம் என மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், கையில் இரண்டு இடங்களிலும், வலது பக்ககம் கழுத்தின் ஒரு இடத்திலும் காயம் ஏற்பட்டது. முக்கியமாக அவரது முதுகு தண்டுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்த கூர்மையான பொருளை அப்புறப்படுத்தி, காயம் சரி செய்யப்பட்டது என தெரிவித்தனர்.
சைஃப் அலி கானை கைத்தியால் குத்திய மர்ம நபரை பிடிக்க 30 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளியின் படங்களை போலீசார் வெளியிட்டுள்ளது. சைஃப் அலி கான் மீதான தாக்குதலுக்கு சினிமா பிரபலங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.