சினிமா செய்திகள்

யுவன் இசையில் முதல் பாடலை பாடிய சநா

Published On 2024-07-04 02:27 GMT   |   Update On 2024-07-04 02:27 GMT
  • படத்தின் முதல் பாடலும் டீசரும் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
  • படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் இயக்கும் இயக்குனர்களில் இயக்குனர் ராம் மிக முக்கியமானவர். இவர் எடுக்கும் திரைப்படங்கள் ஒரு வாழ்க்கையின் தீஸிஸ் என்று சொல்லலாம். சமூதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து படங்களை இயக்குவார்.

2018 ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி மற்றும் சாதனா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் பேரன்பு. அதைத்தொடர்ந்து தற்பொழுது ஏழு கடல் ஏழு மழை திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் சுரேஷ் காமாட்சியின் 'வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் நடித்து விரைவில் திரையில் வெளியாகவுள்ளது. இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட்டு பல விருதுகளை வென்றும், சர்வதேச பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்று வருகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன்' போட்டிப் பிரிவிற்காகத் தேர்வு செய்யப்பட்டு, ரோட்டர்டாம் நகரின் சிறப்புமிக்க பாதே சினிமாஸ் திரையரங்கில் மூன்று காட்சிகள் பொதுமக்களின் பார்வைக்காக இந்த திரைப்படம் திரையிடப்பட்டது.

படத்தின் முதல் பாடலும் டீசரும் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. தற்பொழுது படத்தின் இரண்டாம் பாடலை வரும் ஜூலை 5 ஆம் தேதி மாலை 6 மணியளவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் படத்தின் இரண்டாம் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். யுவனின் இசையில் சந்தோஷ் பாடுவது இதுவே முதல்முறை. இரண்டு நபர்களுமே தமிழ் இசை உலகில் பெரும் ஜாம்பவான்கள். இதனால் இப்பாடலிற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஏழேழு மலை என தலைப்பிடப்பட்டுள்ள இந்த பாடலிற்கு மதன் கார்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News