சினிமா செய்திகள்
திருமண ஆவணப்படத்தில் காட்சி- நடிகர் தனுஷை தொடர்ந்து நயன்தாராவுக்கு மேலும் ஒரு நோட்டீஸ் ?
- ரஜினி- நயன்தாரா நடித்திருந்த சந்திரமுகியை சிவாஜி புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
- சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை நயன்தாரா வெளியிட்டிருந்தார்.
நடிகர் தனுஷை தொடர்ந்து சந்திரமுகி திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக இழப்பீடு கேட்டு நடிககை நயன்தாராவுக்கு மற்றொரு நிறுவனமும் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி- நயன்தாரா நடித்திருந்த சந்திரமுகியை சிவாஜி புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
இந்நிலையில், நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் சந்திரமுகி திரைப்பட காட்சியை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சந்திரமுகி திரைப்படத்தின் ஆன்லைன் தொடர்புடைய உரிமை, வேறொரு நிறுவனத்திடம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, திருமண ஆவணப்படத்தில் சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை நயன்தாரா வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.