AGS தயாரிப்பில் நடிக்கும் சிவகார்த்தியேன் - யார் அந்த பெரிய இயக்குனர்?
- கடந்த ஆண்டு இவர்களது தயாரிப்பில் வெளியான கோட் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப்பெற்றது.
- அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகும் டிராகன் திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம். கடந்த ஆண்டு இவர்களது தயாரிப்பில் வெளியான கோட் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப்பெற்றது.
அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகவுள்ள டிராகன் திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இது இவர்கள் தயாரிக்கும் 26- வது திரைப்படமாகும்.
இதை தொடர்ந்து இந்தியில் லயன் மற்றும் சிம்பு நடிக்கும் 51 - வது திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர். சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவர் அடுத்து தயாரிக்கும் திரைப்படத்தை பற்றி சில தகவலை கூறியுள்ளார்.
அதில் அவர் அடுத்ததாக ஏ.ஜி.எஸ் நிறுவனம் நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அப்படத்தை பெரிய பிரபல இயக்குனர் இயக்கப் போவதாகவும் கூறியுள்ளார். யார் அந்த இயக்குனர் என்ற தகவல் வெளியாகவில்லை. அது இயக்குனர் வெங்கட் பிரபு வாக இருக்கும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.