சினிமா செய்திகள்

கார் ரேஸில் பங்கேற்றுள்ள அஜித்-க்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து

Published On 2025-01-11 11:16 IST   |   Update On 2025-01-11 11:16:00 IST
  • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
  • கார் ரேஸ் தொடர் நடைபெறாத மாதங்களான அக்டோபர் முதல் மார்ச் வரை திரைப்படங்களில் நடிப்பேன் என கூறி இருந்தார்.

நடிகர் அஜித் 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கியுள்ளார். தற்போது கார் பந்தயத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவர் கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்றுள்ளார்.

சில தினங்களுக்கு முன் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானதில் இருந்து காயமின்றி உயிர் தப்பினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து நேற்று அஜித் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது. அதில், திரைப்படங்களில் நடிக்க வேண்டியிருந்ததால் இடையில் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

நடப்பு கார் ரேஸ் தொடர் முடியும் வரை திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கார் பந்தய ஓட்டுநராக மட்டுமல்ல அணியின் உரிமையாளராகவும் வந்துள்ளேன். கார் ரேஸ் தொடர் நடைபெறாத மாதங்களான அக்டோபர் முதல் மார்ச் வரை திரைப்படங்களில் நடிப்பேன் என கூறி இருந்தார். இந்த வீடியோவும் வைரலானது.



இந்த நிலையில், கார் ரேசில் பங்கேற்றுள்ள அஜித்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

அன்புள்ள அஜித் சார், துபாயில் நடைபெறும் 24H தொடருக்கு வாழ்த்துகள்! உங்கள் அசைக்க முடியாத ஆர்வமும் அர்ப்பணிப்பும் தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. இதிலும் நீங்கள் மகத்தான வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன் சார் என்று கூறியுள்ளார்.



உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

Tags:    

Similar News