நிஹால்
இவர் எத்தனையோ ஆண்டுகள் ஓய்வில்லாமல் உழைத்தவர் - நடிகர் நிஹால்
- கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகியிருக்கும் படம் 'விஜயானந்த்'.
- இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையா முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
'ட்ரங்க்' எனும் ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய இயக்குனர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தற்போது தயாராகி இருக்கும் படம் 'விஜயானந்த்'. கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகியிருக்கும் இப்படத்தில் 'ட்ரங்க்' படப் புகழ் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி.ரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விஜயானந்த் படக்குழு
கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் தமிழ் பதிப்பு வசனத்தையும், பாடல்களையும் பாடலாசிரியர் மதுரகவி எழுதியிருக்கிறார். சுயசரிதை படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி.ஆர்.எல்.பிலிம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் ஆனந்த் சங்கேஸ்வர் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
விஜயானந்த் படக்குழு
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையா முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் நிஹால், ஒரு தலைமுறைக்கு நம்பிக்கை தரும் மிகப்பெரும் சாதனையாளராக நான் நடிப்பது பெருமை. நாம் எல்லாம் சாதாரண மனிதர்கள் லீவு நாளில் ஓய்வெடுப்போம் ஆனால் இவர் எத்தனையோ ஆண்டுகள் ஓய்வில்லாமல் உழைத்திருக்கிறார்.அவரது சாதனைகள் வாழ்வில் வெற்றிபெற விரும்பும் அனைவருக்கும் பாடம். இதனை திரைப்படமாக எடுப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இப்படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். அனைத்து மொழிகளிலும் இப்படத்தை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன் என்றார்.
இப்படம் வருகிற டிசம்பர் 09ம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.