சினிமா செய்திகள்

அல்லு அர்ஜுன்

விளம்பரங்களில் நடிக்க இவ்வளவு சம்பளமா? அள்ளிக்குவிக்கும் அல்லு அர்ஜுன்

Published On 2022-09-23 12:39 IST   |   Update On 2022-09-23 12:39:00 IST
  • அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான புஷ்பா படம் வசூலை அள்ளியது.
  • இவர் தற்போது விளம்பரங்களில் நடிக்க வாங்கிய சம்பளம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் - நடிகைகள் சினிமாவோடு சேர்த்து விளம்பர படங்களில் நடித்தும் சம்பாதிக்கிறார்கள். அதுவும் வெற்றி படங்களில் நடித்தவர்களுக்கு விளம்பர பட உலகில் நல்ல மார்க்கெட் உள்ளது. அவர்களுக்கு கேட்ட தொகையை கொடுத்து தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தும் படங்களில் நடிக்க வைக்க பெரிய நிறுவனங்கள் வரிசை கட்டுகின்றன.

 

அல்லு அர்ஜுன்

தற்போது தெலுங்கு பட உலகில் அல்லு அர்ஜுன் அந்த நிறுவனங்கள் பார்வையில் இருக்கிறார். அல்லு அர்ஜுன் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வந்த புஷ்பா படம் வசூலை அள்ளியது. இதன் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது.

அல்லு அர்ஜுன்

 

புஷ்பா படத்தில் நடித்த பிறகு இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக அல்லு அர்ஜுன் உயர்ந்துள்ளதால் 5 விளம்பர படங்களில் நடிக்க வெவ்வேறு கம்பெனிகள் அவரை அணுயுள்ளன. இந்த ஐந்து விளம்பரங்களுக்கும் சேர்த்து அல்லு அர்ஜுன் ரூ.45 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு விளம்பரத்துக்கு ரூ.9 கோடி வரை அவர் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. முன்பெல்லாம் இந்தி நடிகர்களுக்குத்தான் இதுபோல் அதிக விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News