சினிமா செய்திகள்
null

விருமன் இயக்குனருடன் இணைந்த ஆர்யா- போஸ்டருடன் அறிவித்த ஜி.வி.பிரகாஷ்

Published On 2022-10-09 11:30 IST   |   Update On 2022-10-09 11:32:00 IST
  • குட்டிபுலி, கொம்பன், மருது, விருமன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய முத்தையா இயக்கும் படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார்.
  • இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயாகனாக அறிமுகமானவர் ஆர்யா. அதன்பின்னர் உள்ளம் கேட்குமே, பட்டியல், ஓரம் போ, நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, ஆரம்பம், இரண்டாம் உலகம், டெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகிக் கொண்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சார்ப்பட்டா பரம்பரை படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.

 

ஆர்யா-34

இந்நிலையில் நடிகர் ஆர்யாவின் 34-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தை குட்டிபுலி, கொம்பன், மருது, விருமன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

Tags:    

Similar News