சினிமா செய்திகள்

தனுஷ்

மீண்டும் இயக்குனராகும் தனுஷ்..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Published On 2022-10-30 17:45 IST   |   Update On 2022-10-30 17:45:00 IST
  • தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’நானே வருவேன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
  • இவர் நடித்துள்ள ‘வாத்தி’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான தனுஷ் பாடகர், தயரிப்பாளர், பாடலாசிரியர் என பல்வேறு பரிணாமங்களில் அசத்தி வருகிறார். இவர் இயக்கத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான 'பவர் பாண்டி' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.


பவர் பாண்டி

இந்நிலையில், இவர் மீண்டும் இயக்குனராக களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் பிரமாண்டமாக உருவாக உள்ள இப்படத்தில் நடிப்பவர்களின் விவரம் விரைவில் வெளியாகும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தனுஷ்

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'நானே வருவேன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'வாத்தி' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News