வெளிச்சம் கொடுக்குற சூரியன் மாதிரி தான் நீ இருக்கனும்.. வைரலாகும் விருமன் பட டிரைலர்
- முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் விருமன்.
- விருமன் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கொம்பன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி 'விருமன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் 'விருமன்' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. 'விருமன்' படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா, மதுரை, ராஜா முத்தையா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. ஆக்சன் காட்சிகளுடன் வெளியான விருமன் திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
'விருமன்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.