சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

null

இங்கு நல்ல மீம்கள் விற்கப்படும்! - நடிகர் பார்த்திபன் கலாய்

Published On 2022-09-27 10:03 IST   |   Update On 2022-09-27 10:08:00 IST
  • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
  • இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் வரும் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தற்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

 

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

இதனிடையே நடிகர்-நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் சரித்திர காலத்து ஆடை ஆபரணங்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களை தங்கள் வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். நேற்று நடிகர் பார்த்திபன் படப்பிடிப்பு தளத்தில் கண்ணாடி அணிந்து ஐஸ்வர்யாரா மற்றும் சரத்குமாருடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு ஐஸ்வர்யாராயை கவிதை வடிவில் பாராட்டியிருந்தார்.

 

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

இந்த புகைப்படத்திற்கு கீழே ஒரு ரசிகர் சார் எனக்கு ஒரு சின்ன ஹாய் சொல்லுங்க என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பார்த்திபன் அந்த ரசிகரை கலாய்க்கும் வகையில் "சின்ன ஹாய்" என்று பதிவிட்டிருந்தார். இதனை ஒரு மீம் பக்கத்தில் குறிப்பிட்டு இந்த புகைப்படத்துடன் ஒரு மீம் வெளியிட்டிருந்தனர்.

பார்த்திபன் பதிவு

 

இந்நிலையில் அந்த மீம் புகைப்படத்தை இணைத்து நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ளார். அதில், மீன்ல விரால் நல்லது, மீம்ஸ் வைரல் ஆவது நல்லது! (எடிட்டர் ஹரீஷ் அனுப்பியதால் வந்த தத்துவமிது) இங்கு நல்ல மீம்கள் விற்கப்படும்! என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News