ரஜினி
ஜெயிலர் ஷூட்டிங்.. ரஜினியை நேரில் சந்தித்த பிரபல காமெடி நடிகர்..
- நடிகர் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
- இவரை காமெடி நடிகர் ரோபோ சங்கர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
ரோபோ சங்கர் - ரஜினி
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் ரோபோ சங்கர் தனது 22-வது திருமணநாளையொட்டி நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் குடும்பத்துடன் ரோபோ சங்கர்
ரோபோ சங்கர் இந்த சந்திப்பிற்காக ரஜினியிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், அவரது குடும்பத்தினரை நேரடியாக படப்பிடிப்பு தளத்திற்கே வரவழைத்து ரஜினி சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.