சினிமா செய்திகள்

ரஜினி - ஏ.ஆர்.ரகுமான்

null

விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் ஏ.ஆர்.ரகுமான் இயக்கிய லி மஸ்க் படத்தை கண்டு ரசித்த ரஜினி

Published On 2022-12-01 09:51 IST   |   Update On 2022-12-01 09:59:00 IST
  • இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தற்போது 'லி மஸ்க்' என்ற திரைப்படத்தை முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியுள்ளார்.
  • விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'லி மஸ்க்' திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்துள்ளார்.

இந்திய திரையரங்குகளில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான், திரைப்படங்களை இயக்குவதிலும் தனது கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளார். முன்னதாக '99 சாங்ஸ்' என்ற திரைப்படத்திற்கு கதை எழுதி, இசையமைத்திருந்தார். அதே போல் 'லி மஸ்க்' என்ற திரைப்படத்தை முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமான் இயக்கியுள்ளார். 36 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம், 'விர்ச்சுவல் ரியாலிட்டி' என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

 

ஏ.ஆர்.ரஹ்மான் - ரஜினி

இந்த படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 'விர்ச்சுவல் ரியாலிட்டி' மூலம் திரைப்படங்களை காண்பதற்கு பிரத்யேக கண்ணாடி போன்ற கருவி கொடுக்கப்படுகிறது. மேலும் பார்வையாளர் அமரும் நாற்காலியானது, திரைப்படத்தில் வரும் காட்சிக்கு ஏற்ப அசைவுகளை கொடுக்கிறது. இதனால் பார்வையாளர்கள் காட்சிக்குள் சென்றது போன்ற தத்ரூபமான அனுபவத்தைப் பெறுகிறார்கள்.

 

'லி மஸ்க்' படத்தை கண்டு ரசித்த ரஜினி

இத்தகைய தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'லி மஸ்க்' திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்துள்ளார். விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடியை அணிந்து கொண்டு ரஜினிகாந்த் படம் பார்க்கும் புகைப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Tags:    

Similar News