சினிமா செய்திகள்

சூரி

போய் வா தம்பி.. நடிகர் ஹரி வைரவன் மறைவிற்கு சூரி இரங்கல்..

Published On 2022-12-03 14:28 IST   |   Update On 2022-12-03 14:28:00 IST
  • வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹரி வைரவன் இன்று காலமானார்.
  • இவரது மறைவிற்கு திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஹரி வைரவன். இவர் நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து இன்று அதிகாலை 12.௧௫ மணியளவில் இவர் காலமானார். இவருடைய இறப்பு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


ஹரி வைரவன்

இந்நிலையில், நடிகர் ஹரி வைரவன் மறைவு குறித்து சூரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இன்று காலை தம்பி வைரவனின் மறைவு செய்தி கேட்டு பெரும் துயர் கொண்டேன். பிரிவின் மீளா துயரில் தவிக்கும் குடும்பத்தார்க்கு அந்த ஆத்தா மீனாட்சி எல்லா தைரியத்தையும் தர வேண்டுகிறேன். போய் வா தம்பி" என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.


ஹரி வைரவன்

ஹரி வைரவன் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் கடச்ச நேந்தலில் இன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags:    

Similar News