சினிமா செய்திகள்

காதல் பாலினம் சார்ந்தது அல்ல, இதயம் சார்ந்தது.. நடிகை ஜோதிகா பதிவு

Published On 2023-02-14 08:10 GMT   |   Update On 2023-02-14 08:10 GMT
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா.
  • தற்போது இவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள காதல் என்பது பொதுவுடமை படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ளார்.

2016-ம் ஆண்டு வெளியான லென்ஸ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். அதன்பின்னர் தி மஸ்கிட்டோ பிலாசபி என்ற படத்தை இயக்கியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு வெளியான தலைக்கூத்தல் படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். இதில் சமுத்திரகனி, கதிர், வசுந்தரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

 

ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் தற்போது காதல் என்பது பொதுவுடமை என்ற படத்தை இயக்கவுள்ளார். இதில் ஜெய் பீம் படத்தில் நடித்து பிரபலமடைந்த லிஜோமோல் நடிக்கிறார். மேலும் ரோகிணி, வினித், அனுஷா மற்றும் தீபா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

 

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை நடிகை ஜோதிகா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, காதல் என்பது இரண்டு பாலினம் சார்ந்தது அல்ல, அது இரண்டு இதயம் சார்ந்தது. காதலையும் அன்பையும் மட்டுமே மதித்து காதலர் தினத்தை கொண்டாடுவோம் என குறிப்பிட்டு காதல் என்பது பொதுவுடமை படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News