சினிமா செய்திகள்

சமந்தா

விஜய் தேவரகொண்டா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சமந்தா.. வைரலாகும் பதிவு..

Published On 2023-02-01 14:16 IST   |   Update On 2023-02-01 14:16:00 IST
  • சமந்தா நடிப்பில் 'சாகுந்தலம்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
  • இதையடுத்து சமந்தா ‘குஷி’ திரைப்படத்தில் மீண்டும் இணையவுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில் 'சாகுந்தலம்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே நடிகை சமந்தா இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படத்தில் நடித்து வந்தார்.


சமந்தா

இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது. தற்போது உடல்நிலை தேறியுள்ள சமந்தா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.


சமந்தா

இந்நிலையில், நடிகை சமந்தா தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடிக்கும் 'குஷி' படத்தின் நிலை குறித்து கேள்வி கேட்க அதற்கு "குஷி திரைப்படம் விரைவில் தொடங்கப்படும். விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் என்னை மன்னியுங்கள்" என பதிவிட்டுள்ளார்.


Tags:    

Similar News