null
வித்யாசமான கெட்-அப் உடன் அப்டேட் கொடுத்த அருள்நிதி
தமிழ் திரையுலகில் மாறுபட்ட திரைக் கதைகளை தேர்வு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் அருள்நிதி. 'களத்தில் சந்திப்போம்' படத்தை தொடர்ந்து இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் 'டைரி' படத்திலும், அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் 'தேஜாவு' படத்திலும், விஜய் குமார் இயக்கத்தில் 'டி பிளாக்' படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் திரைக்குவர இருக்கிறது.
இந்நிலையில் அருள்நிதி நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட்டை வித்யாசமான கெட்-அப் உடன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அருள்நிதி அறிவித்துள்ளார். அருள்நிதி அடுத்த படத்தில், ராட்சசி படத்தை இயக்கிய கௌதம் ராஜுடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, டி இமான் இசையமைக்கவுள்ளார். அருள்நிதி கிராமத்து இளைஞனாக முரட்டு மீசையில் இருக்கும் கெட்-அப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.