சினிமா செய்திகள்

வசந்த் ரவி

null

'அஸ்வின்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

Published On 2023-05-20 13:25 IST   |   Update On 2023-05-20 13:28:00 IST
  • இயக்குனர் தருண் தேஜா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அஸ்வின்ஸ்'.
  • இப்படத்தில் நடிகர் வசந்த் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார்.

தரமணி, ராக்கி ஆகிய படங்களில் நடித்த வசந்த் ரவி தற்போது நடித்துள்ள திரைப்படம் 'அஸ்வின்ஸ்' (ASVINS). இப்படத்தை திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமான தருண் தேஜா இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படம் இருளில் இருந்து மனித உலகிற்கு தீமையை கட்டவிழ்த்துவிடும் 1500 ஆண்டு பழமையான சாபத்திற்கு அறியாமலேயே பலியாகும் யூடியூபர்கள் குழுவை மையமாக வைத்து உருவாகும் சைக்கலாஜிக்கல்- ஹாரர் வகையைச் சேர்ந்தது.


அஸ்வின்ஸ்

இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (எஸ்விசிசி) பி.வி.எஸ்.என். பிரசாத் தயாரித்துள்ளார். இப்படத்தில் விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப் மற்றும் சிம்ரன் பரீக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


அஸ்வின்ஸ் போஸ்டர்

இந்நிலையில், 'அஸ்வின்ஸ்' (ASVINS) திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஜூன் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


Tags:    

Similar News