மீண்டும் விஜய் நடிக்க இருந்த யோகன் திரைப்படத்தை இயக்கும் கவுதம் மேனன்
- மம்மூட்டி நடிக்கும் மலையாள திரைப்படமான டோமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் திரைப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார்.
- கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் யோகன் என்ற திரைப்படம் உருவாக இருந்தது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன். இயக்கம் மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பு மற்றும் நடிப்பு என பலதுறைகளில் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, மம்மூட்டி நடிக்கும் மலையாள திரைப்படமான டோமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் திரைப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
2011 ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் யோகன் என்ற திரைப்படம் உருவாக இருந்தது. அப்படத்தை குறித்த போஸ்டர்கள் வெளியானது. ஆனால் சில சூழ்நிலை காரணமாக திரைப்படம் எடுக்கவில்லை. இத்திரைப்படத்தை மீண்டும் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு மாற்றாக விஷால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்பொழுது கால சூழல்க்கு ஏற்றார் போல கதையை மாற்றியமைக்கும் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.