சினிமா செய்திகள்

பவன் கல்யாண் வீட்டின் மீது பறந்த ஆளில்லா குட்டி விமானம்- போலீசார் விசாரணை

Published On 2025-01-19 10:34 IST   |   Update On 2025-01-19 10:34:00 IST
  • துணை முதல் மந்திரியாக இருப்பவர் பவன் கல்யாண்.
  • விமானம் எந்த திசையில் இருந்து வந்தது என்று விசாரணை.

திருப்பதி:

ஆந்திர மாநில துணை முதல் மந்திரியாக இருப்பவர் பவன் கல்யாண். இவரது வீடு மற்றும் ஜனசேனா கட்சி அலுவலகம் குண்டூர் மாவட்டம், மங்களகிரியில் உள்ளது.

நேற்று மதியம் அலுவலகத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஊழியர்கள் இருந்தனர். அப்போது ஆளில்லா குட்டி விமானம் ஒன்று பவன் கல்யாண் வீட்டின் மீதும் அலுவலகம், மீதும் பறந்து சென்றது. இதனைக் கண்ட கட்சி நிர்வாகிகள் இதுகுறித்து டி.ஜி.பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

டி.ஜி.பி.யின் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் டிஎஸ்பி முரளி கிருஷ்ணா இன்ஸ்பெக்டர் வினோத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் கடைகளில் இருப்பவர்களிடம் ஆளில்லா குட்டி விமானம் எந்த திசையில் இருந்து எந்த திசை நோக்கி சென்றது. எவ்வளவு உயரத்தில் பறந்தது. எவ்வளவு நேரம் பறந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் குட்டி விமானத்தில் ஆட்கள் இருந்தார்களா? அல்லது ஆளில்லா குட்டி விமானம் மூலம் பவன் கல்யாண் வீடு மற்றும் அலுவலகத்தை வேவு பார்பதற்காக குட்டி விமானத்தை யாராவது அனுப்பி வைத்தார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News