சினிமா செய்திகள்

உதயநிதி ஸ்டாலின்

null

அதர்வா படத்தின் அப்டேட் கொடுத்த உதயநிதி

Published On 2022-08-03 13:53 GMT   |   Update On 2022-08-03 14:15 GMT
  • இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் "ட்ரிக்கர்".
  • இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் 'குருதி ஆட்டம்'. இந்த படத்தில் அதர்வாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'குருதி ஆட்டம்' திரைப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதைத்தொடர்ந்து, இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் "ட்ரிக்கர்". இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். மேலும், சீதா, அருண்பாண்டியன், முனீஷ்காந்த், சின்னிஜெயந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


ட்ரிக்கர்

ப்ரமோத் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மேலும் ஆக்ஷன், த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை 'ரோமியோ பிக்சர்ஸ்' நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. இதனை உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News