அட்லீயுடன் கைகோர்க்கும் அல்லு அர்ஜுன்.. இசையமைப்பாளர் இவரா?
- அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
'ராஜா ராணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமான அட்லீ, அதன் பின்னர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கினார்.
இவர் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜவான்' திரைப்படம் பாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி பாக்ஸ் ஆபீஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதையடுத்து அட்லீ அடுத்தது எந்த நடிகருடன் இணையவுள்ளார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் அட்லீயின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அட்லீ இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அல்லு அர்ஜுன் தற்போது சுகுமார் இயக்கத்தில் 'புஷ்பா 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.