ஜனனியை பயன்படுத்தி நீங்க பாதுகாப்பாய்டீங்க.. உண்மையை உடைத்த அசீம்..
- தமிழில் பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இன்று வெளியான புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 9 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 83 நாட்களை நெருங்கியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 6
இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் ஜனனியோட வாய்ப்ப பல வகையில் அமுதவாணன் பறித்து விட்டார். அடுத்தவர்கள் வாய்ப்பை பறித்ததற்காக அமுதவாணனுக்கு கொடுக்கிறேன் என்று அசீம் கூறுகிறார். இதற்கு அமுதவாணன் இல்ல அசீம் அது 100 சதவீதம் பொய் என்று வாதிடுகிறார். இதற்கு அசீம் குத்தம் உள்ள நெஞ்சம் தான் குருகுருக்கும். நான் இப்பவும் சொல்றேன் ஜனனி இந்த வீட்டு விட்டு போக காரணம் நீங்க தான். அவரை பயன்படுத்தி நீங்க பாதுகாப்பாய்டீங்க அவள வெளிய அனுப்பிட்டீங்க என்று உண்மையை உடைக்கிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. சமூக வலைதளத்தில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.