கோபக்காரன்னு பெயர் வாங்குனா கூட பரவாயில்ல.. இந்த வார கேப்டன் யார்..?
- பிக்பாஸ் 6-வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இந்த நிகழ்ச்சி இன்றுடன் 85 நாட்களை நெருங்கியுள்ளது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 9 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 83 நாட்களை நெருங்கியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 6
இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோவில் இந்த வார தலைவருக்கான போட்டியில் அசீம் மற்றும் ஏடிகே கலந்து கொள்கின்றனர். அப்போது அசீம் உங்களை விட எனக்கு கோபம் குறைவு என்று ஏடிகே கூறுகிறார். இதற்கு அசீம் கோபக்காரன்னு பெயர் வாங்குனா கூட எனக்கு பரவாயில்லை என்று கூறுகிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.