null
வாரிசு படக்குழுவினர் கொடுத்த முதல் சர்ப்ரைஸ்
- விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இப்படம் வருகிற சங்கராந்திக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் தில் ராஜுவின் குழந்தையை விஜய் கையில் வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், வாரிசு படத்தின் முதல் சிங்கள் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் சிங்கள் புரோமோவை இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடவுள்ளதாக போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.