ஒரே நாளில் பத்து மில்லியன் பார்வையாளர்களை கடந்த கார்த்தி பட டீசர்
- இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் ‘ஜப்பான்’.
- இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பருத்திவீரன் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் கார்த்தி. அதன்பின்னர் ஆயிரத்தில் ஒருவன், பையா, மெட்ராஸ், கைதி, சுல்தான், சர்தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
கார்த்தி பிறந்த நாளான நேற்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஜப்பான் பட டீசரை படக்குழு வெளியிட்டது. இதனை நடிகர் சிம்பு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். 'ஜப்பான்' மேட் இன் இந்தியா போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ஜப்பான் டீசர் வெளியான ஒரே நாளில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
#Japan intro teaser unlocked ? MILLION HEARTS ❤️ in Real Time !
— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 26, 2023
▶️ https://t.co/F9HmBIbN2T#JapanFromDiwali ?@Karthi_Offl @ItsAnuEmmanuel #Sunil @vijaymilton @gvprakash @dop_ravivarman @ActionAnlarasu @philoedit #Banglan @YugabhaarathiYB @PraveenRaja_Off @Dir_Rajumurugan… pic.twitter.com/dVpRmaugD0