ஜவான் முதல் காட்சியை குடும்பத்துடன் பார்த்த அட்லீ
- ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’.
- இப்படம் இன்று திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் வெளியானது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் வெளியானது.
ஜவான் முதல் காட்சியை பார்த்த அட்லீ- அனிருத்- பிரியா
இந்நிலையில், 'ஜவான்' படத்தின் முதல் காட்சியை இயக்குனர் அட்லீ அவரது மனைவி நடிகை பிரியா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வலம் வருகிறது.