சினிமா செய்திகள்

பிரித்விராஜ்

ரஜினி சார் காமெடி சென்ஸ் பத்தி யாரும் பேசுறது இல்ல - நடிகர் பிரித்விராஜ்

Published On 2022-06-30 13:00 IST   |   Update On 2022-06-30 13:00:00 IST
  • மலையாள திரையுலகின் பிரபலமான நடிகர் பிரித்விராஜ்.
  • பிரித்விராஜ் நடித்து வெளியாகவுள்ள படம் கடுவா.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் இயக்குனர் ஷானி கைலாஷ் இயக்கத்தில் கடுவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சம்யுக்தா மேனன், விவேக் ஓபராய், அர்ஜுன் அஷோகன், சித்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

பிரமாண்டமாக உருவாகி உள்ள இப்படம் வரும் ஜூலை -7 ஆம் தேதி தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாக உள்ளது.


ரஜினிகாந்த்

இந்நிலையில் படத்தின் புரோமோஷன் பணியில் இறங்கியுள்ள கடுவா படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் பிரித்விராஜ் கலந்து கொண்டு கூறுகையில், " கமல் சாரின் காமெடி சென்ஸ் பற்றி நமக்கு தெரியும். பஞ்சதந்திரம் போன்ற படங்களில் பார்த்திருப்போம்.

ஆனால், ரஜினி சாரின் காமெடி சென்ஸ் குறித்து அவ்வளவாக யாரும் பேசியது இல்லை. ரஜினி சாருக்கு சிறந்த நகைச்சுவை தன்மை உள்ளது. அவரை குடும்ப நகைச்சுவை படங்களில் பார்க்க நான் ஆசைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News