அடுத்த படத்திற்கு ரெடியான கார்த்தி.. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு..
- நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சர்தார்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இவர் தற்போது இயக்குனர் ராஜு முருகனுடன் இணைந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான கார்த்தி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'சர்தார்' திரைப்படம் ரூ.100 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பான் பட பூஜை
இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கைதி -2' திரைப்படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். இந்நிலையில், இவர் 'குக்கூ', 'ஜோக்கர்' போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' படத்தில் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார்.
ஜப்பான் பட பூஜை
'ஜப்பான்' திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
#Japan Pooja Pictures☺️@Karthi_Offl @Dir_Rajumurugan @gvprakash @ItsAnuEmmanuel @dop_ravivarman @anbariv @philoedit @Prabhu_sr #Karthi25 pic.twitter.com/2iSwzdslxJ
— DreamWarriorPictures (@DreamWarriorpic) November 8, 2022