அன்பை கொடுங்கள்.. கொட்டுங்கள்- ரசிகர்களுக்கு கீர்த்தி சுரேஷ் வேண்டுகோள்
- நடிகை கீர்த்தி சுரேஷ் பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
- இந்தியில் ரீமேக்காகும் தெறி படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக தன் சினிமா பயணத்தை தொடங்கிய கீர்த்தி சுரேஷ் குறிப்பிடத்தக்க கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடரி, ரெமோ, மாமன்னன் என பல படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். மேலும் பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் மார்க்கெட்டுக்காக மட்டுமல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் மிகவும் வரவேற்பை பெற்ற படம் நடிகையர் திலகம். இந்த படம் இவரின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருதும் பெற்றார்.
சைரன், ரகு தாதா, ரிவால்வர் ரீட்டா போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், அட்லீ இயக்கத்தில் இந்தியில் ரீமேக்காகும் தெறி படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி பல பரிமாணங்களில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ் திரையுலகில் அறிமுகமாகி பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
With love and Gratitude ❤️??#10years pic.twitter.com/7oXslvuh8I
— Keerthy Suresh (@KeerthyOfficial) November 14, 2023