null
லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
- விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'.
- இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
'லியோ' படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் லியோ படத்தின் வெளியீட்டு உரிமை குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் தெலுங்கு திரையரங்க உரிமையை பிரபல நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.