காம்போ பேக்காக ரூ.450-க்கு விற்கப்படும் லியோ டிக்கெட்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘லியோ’.
- இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து 'லியோ' படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோவையில் உள்ள பிரபல திரையரங்கான கே.ஜி.சினிமாஸ் திரையரங்கில் 'லியோ' படத்தின் பால்கனி டிக்கெட்டுக்காக ரூ.192 வசூலிக்கப்படும் போது அதனுடன் காம்போ பேக்காக ரூ.400 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு ஜி.எஸ்.டி எல்லாம் சேர்த்து ரூ.450 வரை வசூலிக்கப்படுகிறது.
இந்த காம்போ பேக்கில் டிக்கெட் வாங்குபவர்கள் டிக்கெட் எடுக்கும் போது பாப்கான், குளிர்பானம் போன்றவற்றையும் உடனடியாக சேர்த்து பதிவு செய்து வாங்கி செல்ல வேண்டும் என்று திரையரங்க ஊழியர்கள் கூறுகின்றனர். மேலும், காம்போ பேக் இல்லாமல் வெறும் ரூ.192 கொண்ட பால்கனி டிக்கெட் கொடுக்க ஊழியர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.