சினிமா செய்திகள்
null

ரசிகர்களால் காயமடைந்த லோகேஷ் கனகராஜ்

Published On 2023-10-24 14:30 IST   |   Update On 2023-10-24 16:05:00 IST
  • விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'லியோ'.
  • இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், 'லியோ' திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து 'லியோ' படக்குழுவினர் கேரளாவில் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகின்றனர். இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்களால் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், "உங்கள் அன்பிற்கு நன்றி கேரள மக்களே. கூட்டத்தில் சிறிது காயம் ஏற்பட்டுவிட்டது. இதனால் அடுத்து நடந்த இரண்டு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. உங்களை சந்திப்பதற்காக மீண்டும் வருவேன். அதுவரை இதே அன்புடன் 'லியோ'வை ரசித்து கொண்டிருங்கள்" என்று பதிவிட்டுள்ளார். 


Tags:    

Similar News